fbpx
RETamil Newsஅரசியல்இந்தியா

உத்திர பிரதேசத்தில் உள்ள ஒரு கால்வாயில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து – 29 பேர் பலி

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா என்ற நகரில் ஆவாத் டெப்போவில் இருந்து இரண்டடுக்கு கொண்ட பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அப்போது அந்த பேருந்து லக்னோவிலிருந்து புது டில்லி நோக்கி சென்று கொண்டிருந்தது.

அந்த பேருந்தில் 50 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை அந்த பேருந்து யமுனா எஸ்பிரஸ் வழிசாலையில் இந்த கால்வாய் ஒன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 29 பேர் பலியாகியுள்ளனர், மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் பற்றி தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியை தொடங்கினர். இந்த விபத்து பற்றி செய்தி அறிந்த உத்திர பிரதேச மாநில முதல்மந்திரி ஆதித்ய நாத் , உயிரிழந்த பயணிகளுக்கு தனது ஆழ்ந்த வருத்தத்தினையும், இரங்கலையும் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்த அனைவருக்கும் தகுந்த சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

உத்திரபிரதேச சாலை போக்குவரத்து கழகம் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு அளிப்பதாக அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close