காங்கிரஸ் எம்.எல்.ஏவிடம் 150 கோடி பாஜக பேரம் பேசியதாக ஆடியோ வெளியிட்டது காங்கிரஸ்!!!
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பசனகவுடாவுக்கு ஜனார்த்தன் ரெட்டி மூலம் பாஜக ரூ. 150 கோடி பேரம் பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனார்த்தன் ரெட்டி பேரம் பேசும் ஆடியோவை காங்கிரஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
மேலும் அவருக்கு அமைச்சர் பதவியும் அளிக்க முன் வந்ததாகவும் காங்கிரஸ் நிர்வாகி உக்ரப்பா குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் பா.ஜ.க.வின் ஆபரேஷன் ‘கமலா’ திட்டம் அம்பலமானது.
சித்தராமையா எச்சரிக்கை
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் கட்சி மாறகூடாது என்று சித்தராமையா எச்சரித்துள்ளார். யாரையும் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவதே பாஜக.வின் வழக்கம் என்பதை புரிந்துகொள்ளுங்கள். ஐதராபாத் விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடையே பேசிய சித்தராமையா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் காங்கிரசில் இருந்தால்தான் எதிர்காலம் உண்டு என்று சித்தராமையா பேசினார்.