fbpx
RETamil Newsஇந்தியாதமிழ்நாடு

மதுபோதையில் பிச்சிளம்குழந்தையை மிதித்து கொன்ற தாய்

சென்னை டிபி.சத்திரம் ஷெனாய் நகரை சேர்ந்தவர் பிரியங்கா. ஏற்கனவே வேலு என்பவரை முதல் திருணம் செய்துகொண்ட பிரியங்கா கருத்துவேறுபட்டால் இரண்டாவதாக தினேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தினேஷிற்கும் பிரியங்கவிற்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

தனது இரண்டாவது கணவர் தினேஷ் குற்ற செயல்களின் காரணமாக போலீசார் கைது செய்ததால் திரும்பவும் தன் முதல் கணவர் வேலுவுடன் வாழ்ந்துவந்துள்ளார்.

தற்போது நேற்று அவரது பெண்குழந்தையான புஷ்பத்தின் மூக்கில் இரத்தம் வலிந்து மூச்சு திணறியதாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர் மேலும் குழந்தையின் மூக்கில் இரத்தம் வலிந்ததால் சந்தேகம் அடைந்த மருத்துவ நிர்வாகம் உடனே டிபி.சத்திரம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்க.

இதன் பின்னர் பிரியங்கா வீட்டை அடைந்த போலீசார் இந்த விஷயம் குறித்து விசாரணை நடத்தினர். முதலில் குழந்தை மூச்சு திணறி தான் இறந்தது என நாடகமாடும் படி மழுப்பலாக பதில் சொன்ன பிரியங்கவை தோண்டி துருவி விசாரித்ததில் அதிர்ச்சியான ஒரு விஷயத்தை பிரியங்கா கூறினார்.

தானும் தன் கணவர் வேலுவும் முழு மது போதையில் இருக்கும்பொழுது குழந்தை சாப்பாடு கேட்டு அழுதது. ஏற்கனவே கையில் காசு இல்லை என்ற விரக்தியில் இருந்தேன் மேலும் போதையில் இருந்ததபோது தொந்தரவு செய்ததால் குழந்தையை கடுமையாக தாக்கியதோடு மட்டுமல்லாமல் குழந்தையின் மீது ஏறி நின்று மிதித்ததாகவும் ஒப்புக்கொண்டார் பிரியங்கா. இதைத்தொடர்ந்து போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெற்ற தாயே பிஞ்சுக்குழந்தையை போதையில் கொலை செய்த சம்பவம் அந்த பகுதில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி நாடே மதுவிலக்கு வேண்டும் என்று போராடும் நிலையில்,மதுவினால் குழந்தை இறந்த சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close