fbpx
RETamil NewsTrending Nowஇந்தியா

மொத்தம் 11 நாட்கள்…! வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் வங்கிகள்..!

Bank holidays on june

டெல்லி:

இந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 11 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ஊரடங்கு இம்மாத இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கியுள்ள ஜூன் மாதத்தில் வங்கிகளின் வேலை நாட்கள், விடுமுறை தினம் பற்றி அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

ஜூனில் மொத்தம் 11 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜூன் 7, ஜூன் 14, ஜூன் 21, ஜூன் 28 ஆகியவை ஞாயிற்றுக் கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை.

13ம் தேதி 2வது சனிக்கிழமை. 27ம் தேதி 4வது சனிக்கிழமை. இவ்விரண்டு நாட்களிலும் வங்கிகள் இயங்காது. ஜூன் 5ம் தேதி புத்த மதத்தின் சகா தவா பண்டிகை. சிக்கிம் மாநிலத்தில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை.

ஜூன் 15ம் தேதி ராஜ சங்க்ராந்தி பண்டிகை என்பதால் புவனேஷ்வர், ஐசாவால் நகரங்களில் வங்கிகள் செயல்படாது. 18ம் தேதி குரு கோபிந்த் சிங் பிறந்தநாளை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் வங்கிகளுக்கு விடுமுறையாகும்.

ரத யாத்திரையை முன்னிட்டு ஜூன் 23ம் தேதி ஒடிசாவில் அனைத்து வங்கிகளும் இயங்காது. ரெம்னா நி ஒப்பந்த தினத்தை முன்னிட்டு மிசோரம் மாநிலத்தில் வங்கிகள் அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close