RETamil Newsஇந்தியாதமிழ்நாடு
ஆந்திர கடல் பகுதியில் நாகை மீனவர்கள் மீது தாக்குதல் – 6 பேர் படுகாயம்.
Attack on fishermen in Andhra Pradesh - 6 people were injured
ஆந்திர மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டு தாக்கப்பட்டதில் நாகை மீனவர்கள் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அக்கரைப்பேட்டையை சேர்ந்த 19 மீனவர்கள் ஆந்திர கடல் பகுதியில் மீன்பிடித்த போது சின்னையாபாளையம் குப்பம் மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டனர்.
தங்கள் பகுதியில் மீன் பிடித்ததாக கூறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் காயமடைந்த நாகை மீனவர்கள் 6 பேர் நெல்லூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில் 5 பேர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இதில் இடும்பன் என்ற மீனவர் சுயநினைவற்ற நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.