fbpx
GeneralRETamil NewsTrending Nowஉலகம்

ஸ்காட்லாந்து ஓட்டலில் நிகழ்ந்த விபரீதம்…! சாப்பிட்டு கொண்டிருந்த 3 பேரை விரட்டிக் கொன்ற மர்ம நபர்!

A unknown men attacks in hotel, 3 killed in Scotland

லண்டன்:

ஸ்காட்லாந்தில் சொகுசு ஒட்டல் ஒன்றில் மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் சொகுசு ஒட்டல் ஒன்று உள்ளது. அந்த ஒட்டலில் வாடிக்கையாளர்களும், ஊழியர்களும் வழக்கமான வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது ஓட்டலுக்குள் திடீரென்று கத்தியுடன் நுழைந்த மர்ம நபர், அங்கு இருந்தவர்கள் மீது கத்தியால் கண்மூடித்தனமாக கொலைவெறித்தாக்குதல் நடத்தினார். ஓட்டலில் இருந்தவர்கள் அனைவரும் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தனர்.

அப்போது மர்ம நபர் அலறியடித்துக்கொண்டு ஓடிய மக்களை குறிவைத்து கொடூரமாக கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார். தாக்குதல் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்ற போலீசார் அந்த சந்தேக நபரை சுட்டுக்கொன்றனர்.

அவர் நடத்திய இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர்.  சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதும் தற்போது போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close