RETamil Newsஅரசியல்
ஸ்டெர்லைட் எதிர்ப்பு கிளர்ச்சி; போர்க்களமானது தூத்துக்குடி-போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!!
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வலியுறுத்தி 18 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர்.
ஆனால் பொதுமக்களை தடுத்த நிறுத்த போலீசார் வஜ்ரா வாகனங்களில் இருந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பொதுமக்கள் முன்னேறி சென்றனர் அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.