fbpx
REஇந்தியாஉலகம்

ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது;மலேசிய அரசு திட்டவட்டம்.

கோலாலம்பூர் :  இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் தற்போது மலேசியாவில் இருந்து வருகிறார்.

தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக எடுத்து வைப்பதில் மிகவும் திறமைசாலி என்ற பெயர் எடுத்தவர் ஜாகிர் நாயக்.

2016ம் ஆண்டு இந்தியாவிலிருந்து வெளியேறி மலேசியா சென்ற ஜாகிர் நாயக் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடான மலேசியா நிரந்தர குடியுரிமை அளித்து கவுரவித்தது.

இதற்கிடையில் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர் என ஜாகிரை மத்தியில் ஆளும் பாஜக அரசு  அறிவித்ததுடன், அவரை இந்தியா அழைத்து வர தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த ஆண்டு, ஜனவரி மாதம் ஜாகிரை டில்லி அழைத்து வர இந்தியா முடிவு செய்தது. இதற்காக மலேசியாவுடன் ஒப்பந்தம் ஒன்றும் போடப்பட்டது.

இந்நிலையில் மலேசிய அரசு கூறுகையில்,

நீண்ட நெடுங்காலமாக  ஜாகிர் எந்த பிரச்னையையும் உருவாக்கவில்லை. அவரை இந்தியாவிடம் ஒருபோதும் ஒப்படைக்க முடியாது.

ஜாகிர் மலேசியாவில் நிரந்தர குடியுரிமை பெற்றவர் என மலேசிய பிரதமர் மகாதிர் முகம்மது ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.

தனக்கு இந்தியா திரும்பும் எண்ணம் இல்லை என ஜாகிரும் கூறி வந்த நிலையில், அவருக்கு ஆதரவாக மலேசிய பிரதமர் தெரிவித்துள்ள கருத்து, உலக நாடுகள் பலவற்றையும் நிம்மதி அடைய வைத்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close