கொடூரக் கொரோனா திண்டாடி ஓடும்…! அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்!
Minister vijayabaskar twitter

சென்னை:
அஞ்சாத அயல்நாடுகளும் திண்டாடி நடுங்கும் கொடூரக் கொரோனா திண்டாடி ஓடும் என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் அதிகரித்து வருவதால் சுகாதார நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இந் நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி உள்ளதாவது:
அஞ்சாத அயல்நாடுகளும் திண்டாடி நடுங்கும் கொடூரக் கொரோனா திண்டாடி ஓடும். விலகியிருந்து விழிப்புடன் இருந்து வென்றிடுவோம் பெருந்தொற்று அரக்கனை.
முகக்கவசம் தரித்து கைகளைச் சுத்தப்படுத்தி அநாவசியம் தவிர்த்து வீட்டிலிருங்கள்; அடங்கும் தொற்று;
நமது அரசு முன்னின்று மக்களை காக்கும்.. நாங்கள் இருக்கிறோம் போர்க்களத்தில் … மருத்துவப் பணியாளர்களாக காவல்துறை வீரர்களாக உங்களுக்காக போராடுகிறோம்! ஒத்துழைப்பு மட்டும் தந்து நம்பிக்கையோடு காத்திருங்கள்…. கொரோனாவை வீழ்த்துவோம் என்று கூறி உள்ளார்.
















