RETamil Newsதமிழ்நாடு

சென்னை கோயம்பேடு சந்தையில் மேலும் ஒருவருக்கு கொரோனா

One More Person Affected by corona! Koyambedu market!

 

சென்னை கோயம்பேடு சந்தையில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 3 வதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனால் அங்கு வேலை பார்க்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனையானது நடமாடும் வாகனம் மூலம் எடுத்து வருகின்றனர். இதனால் அங்கு செயல்பட்டு வந்த 1500 சில்லறை விற்பனை கடைகளை மூட சென்னை மாநகராட்சி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காய்கறி சந்தைகளில் மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதில்லை என்றும் வெளிநாட்டினர் இது போன்று அலட்சியமாக இருந்ததால் தான் பெரிய இழப்பை சந்தித்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

மேலும் மக்கள் அதை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்றும் ஆரம்ப கால கட்டத்திலேயே மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால், எளிதாக தடுக்கலாம் என்றும் அறிவுறுத்தினார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close