REஇந்தியா

மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பா? பிரதமர் மோடி வருகிற ஏப்ரல் 27-ந்தேதி ஆலோசனை!

பிரதமர்  மோடி வருகிற ஏப்ரல்  27-ந்தேதி காலை மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி வழியாக ஊரடங்கு  நீட்டிப்பு  குறித்து  முக்கிய  ஆலோசனை  நடத்துகிறார்.

அப்போது ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமா என்பது தொடர்பாக முதலமைச்சர்களின்  கருத்துகளை அவர் கேட்டறிகிறார்.

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து பிரதமர் மோடி, முதன் முதலாக கடந்த மாதம் 20-ந்தேதி முதலமைச்சர்களுடன் காணொலி  காட்சி வழியாக விவாதித்தார்.

கடந்த ஏப்ரல் 11-ந்தேதி இரண்டாவது முறையாக அவர்  முதலமைச்சர்களுடன்  காணொலி காட்சி வழியாக கலந்துரையாடி, மாநிலங்களில்  கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

வரும் ஏப்ரல்  27-ந்தேதி அவர் முதலமைச்சர்களுடன்  ஆலோசனை நடத்த இருப்பது இது 3-வது முறை ஆகும்.

Related Articles

Back to top button
Close
Close