RETamil News
கர்நாடகாவில் பாய்லர் வெடித்து 6 பேர் பலி,5 பேர் படுகாயம் .

கர்நாடக மாநிலத்தில் உள்ள பகல்கோட் மாவட்டத்தின், முதோல் என்ற இடத்தில் உள்ள சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 5 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் மேலும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.















