GeneralRETamil NewsTrending Nowஇந்தியா
80000 பேருக்கு கொரோனா…! மகாராஷ்டிராவின் தற்போதைய நிலை இதுதான்…!
80000 corona cases in Maharashtra

டெல்லி:
மகாராஷ்டிராவில் 80,229 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,36,657 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 6642 பேர் உயிரிழந்த நிலையில்,1,15,942 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்துள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 80,229 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. இதுவரை 2849 பேர் உயிரிழக்க, 35,156 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் 28,694 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 232 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 15,762 பேர் குணமடைந்து உள்ளனர்.
டெல்லி 3வது இடத்தில் இருக்கிறது. அங்கு 26,334 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 708 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 10,315 பேர் குணமடைந்துள்ளனர்.















