எல்லைப்பகுதியில் பயங்கரவாத தாக்குதல் – 4 இந்திய ராணுவ வீரர்கள் மரணம்
எல்லை பகுதியான ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்புரா மாவட்டம் அருகே உள்ள பகுதியில் பயங்கரவாதிகலாகிய எட்டு பேர் கொண்ட கும்பல் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களைத் தடுக்க இந்திய ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.அவர்களின் சிலர் பாகிஸ்தான் வசம் உள்ள பகுதிக்கு தப்பி சென்றுள்ளனர்.
இத்தாக்குதலில் 2 பேரை நம் இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது . அதில் நம் நாட்டு இந்திய வீரர்கள் 4 பேர் பேர் மரணம் அடைந்துள்ளனர். இத்தாக்குதலை அறிந்த பாதுகாப்பு துறையினர் கூடுதல் வீரர்களுடன் அங்கு சென்றுள்ளனர் .
மேலும் இந்திய ராணுவத்திடம் சிக்காத தீவிரவாதிகளை தேடும் பணி முழு வீச்சில் நடைபெறுகிறது. இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எல்லை பாதுகாப்பு பகுதியில் ஊடுருவும் முயற்சிகள் அணைத்தும் நம் இந்திய ராணுவ வீரர்கள் முறியடிப்பார்கள் என்று சென்ற வாரம் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.