fbpx
RETamil Newsஇந்தியாதமிழ்நாடுவிளையாட்டு

ஐபிஎள் – 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பெங்களூர் அணி

ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் இன்றைய ஐபிஎல் முதல் போட்டியில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் திரிபாதியும், ஜோல்டா ஆர்ச்சரும் களமிறங்கினர். இரண்டாவது ஓவரிலேயே ஆர்ச்சர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

அடுத்து இறங்கிய கேப்டன் ரகானே திரிபாதியுடன் இணைந்து நிதானமாக ஆடினார். இருவரும் இணைந்து 99 ரன்கள் ஜோடி சேர்த்த நிலையில், ரகானே 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஆடிய சஞ்சு சாம்சன் டக் அவுட்டாகினார். அடுத்து ஆடிய கிளாசன் 32 ரன்னிலும், கிருஷ்ணப்பா கவுதம் 14 ரன்னிலும் வெளியேறினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் திரிபாதி இறுதி வரை ஆட்டமிழக்காமல் பொறுப்புடன் விளையாடினார்.

இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது. திரிபாதி 58 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரியுடன் 80 ரன்களுடன் களத்தில் நின்றார்.

பெங்களூர் அணி சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி விளையாடி வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close