fbpx
RETamil Newsஇந்தியா

மும்பையில் 55 வயதுக்கு மேற்பட்ட போலீசார் விடுப்பில் செல்லுங்கள் – மும்பை காவல்துறை அறிவுறுத்தல்

உலகையே அச்சுறுத்தி வந்துகொண்டிருக்கும் இந்த கொடூர கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது இந்தியாவிலும் அதன் ஆட்டம் ஆரம்பிக்க தொடங்கியுள்ளது.

இந்தியாவில் தற்போதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை எட்டும் நிலையில் உள்ளது. அதில் முக்கியமாக மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. அங்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8590-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு 369-ஆக உள்ளது.

கொரோனா தடுப்பு முக்கிய பணிகளில் காவல்துறையினரின் பணியும் இன்றியமையாததாக உள்ளது. தற்போது காவல்துறையின் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் காவல்துறையை சேர்ந்த 107 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.அவர்களில் பெரும்பாலானோர் மும்பையை சேர்ந்தவர்கள்.

மும்பையில் மட்டும் கடந்த 3 நாட்களில் 3 போலீசார் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.இதையடுத்து மும்பை காவல்துறையில் பணியாற்றும் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்பே நோய் தாக்கம் உடையவர்கள் விடுப்பில் செல்லும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இறந்துபோன 3 போலீசார்களுக்கும் , மருத்துமனையில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிட்சையில் உள்ள போலீஸ்க்காரர்களும் 55 வயதை கடந்தவர்கள். இதனை கருத்தில் கொண்டு , 55 வயதிற்கு மேற்பட்ட போலீஸ்கரகள் மற்றும் அதிகாரிகளை பாதுகாக்கும் நோக்கத்தில் விடுப்பில் செல்லும் படி கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close