திருமாவளவன்–“அடங்க மறு, அத்து மீறு என்றால் வன்முறை அல்ல” …!
வழக்கறிஞர் தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வரும் நிலையில், “அடங்க மறு, அத்து மீறு என்றால் வன்முறை அல்ல” திருமாவளவன்பேசியிருப்பதுகவனம்பெற்றிருக்கிறது.சென்னை தேனாம்பேட்டையில் நேற்று ஆறு அறிவு எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றிருந்த திருமாவளவன் மேற்குறிப்பிட்ட கருத்தை தெரிவித்திருக்கிறார்.அவர் மேலும் பேசியதாவது, “அடங்க மறு, அத்துமீறு, திமிறி எழு, திருப்பி அடி என்பது வன்முறைக்கான வார்த்தைகள் அல்ல. வன்முறையை எதிர்த்து நிற்கும் தற்காப்புக்கான வாக்கியம். உன்னை அடித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்றால் அதை பொறுத்துக் கொண்டே இருக்க வேண்டிய அவசியம் கிடையாது என்பதை தான் இந்த முழக்கங்கள் கூறுகின்றன. சாதாரண கெளுத்தி மீனை பிடித்தால் கூட அது திமிறி எழுந்து முள்ளால் நம்மை காயப்படுத்துகிறது. தேள் கூட விஷம் கொண்ட கொடுக்கை வைத்து எதிரியை கொட்டுகிறது. குளவி கூட்டை கலக்கும் போது அது நூற்றுக்கணக்கில் திரண்டு கலைத்தவர்களை தாக்குகிறது. இதெல்லாம் இயற்கையில் உள்ள எதிர்கொணர்ச்சி வன்முறை அல்ல. இதைத்தான் அடங்க மறு அத்துமீறு திமிறியது திருப்பி அடி என்கிற முழக்கத்திற்கான அர்த்தங்கள்” என்று பேசியிருக்கிறார்.முன்னதாக சென்னை உயர்நீதிமன்ற அருகே வழக்கறிஞர் ராஜீவ்காந்தியை தாக்கியதாக விசிகவினர் மீது குற்றச்சாட்டு எழுந்திருந்து. திருமாவளவன் கார், ராஜீவ்காந்தியின் பைக் மீது மோதியதாக எழுந்த வாக்குவாதம் கை கலப்பாக மாறியிருந்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியிருக்கின்றன. அதில், சிலர் ராஜீவ்காந்தியை துரத்திக்கொண்டு வந்து அவரை தாக்கியது பதிவாகியிருக்கிறது. தாக்கியவர்கள் விசிகவினர் என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.ஒரு பக்கம் “அடங்க மறு, அத்து மீறு என்றால் வன்முறை அல்ல” என்று திருமாவளவன் சொன்னாலும், அவரது தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டிருப்பது நியாயமா? என்று பலரும் கேள்வியை எழுப்பியுள்ளனர்.