fbpx
REஇந்தியா

பிரதமர் மோடி பேச்சு;முழு விபரம்!

மே 17 ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் இன்று இரவு எட்டு மணிக்கு உரையாற்றினார்.

அப்போது பேசிய மோடி ; கொரோனா தொற்றுக்கு எதிராக 4 மாதங்களாக போராடி வருகிறோம்.

உலக நாடுகள் அனைத்தும்  மண்டியிட்டு விட்டது இந்த கொரோனா வைரஸால்.

கொரோனா வைரஸ்க்கு எதிரான போரை தொடர வேண்டியுள்ளது.

நம்மை நாமே தற்காத்துக் கொண்டு கொரோனாவிற்கு எதிராக போராட வேண்டிய கட்டாயம் உள்ளது.

எதையாவது செய்து முன்னேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இந்தியா சுயசார்புள்ள நாடு என்பதை நாம்  நிரூபித்து காட்ட  வேண்டும்.

இப்பொழுது நாம்  ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமான பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்கிறோம்.

உலக நாடுகளுக்கு இந்தியா ஒரு நம்பிக்கை ஒளியையை  வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய போது இந்தியா பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்கவில்லை.

சுயசார்பு என்ற வார்த்தைக்கான பொருள் உலகளவில்  மாறிவிட்டது.

வளர்ச்சி பாதைக்கு இந்தியா திரும்புகிறது.

இந்தியாவின் திறன் மீது உலக நாடுகள் நம்பிக்கை வைத்துள்ளன.

தற்சார்பு பொருளாதாரத்தை மேற்கொள்வதன் மூலம் நாட்டை வளமாக்க முடியும்.

இந்தியா அளித்துள்ள மருந்துகள் உலகில் பல்வேறு உயிர்களை காப்பாற்றி வருகிறது.

நாம் ஒன்றிணைந்தால் தீர்க்க முடியாத பிரச்சனை என்று எதுவும் இல்லை.

உற்பத்தி மற்றும் சேவைத்துறை இடையேயான இணைப்பை பலப்படுத்த வேண்டும்.

பொருளாதார சிக்கலை சமாளிக்க ரூ.20 லட்சம் கோடி நிதியுதவி வழங்கப்படும்.

தேவைகளை பூர்த்தி செய்ய உற்பத்தியாளர்கள் அனைவரும் ஒன்றினைய வேண்டும்.

சிறப்பு நிதி தொகுப்பு பயன்படுத்தப்படும் விபரங்கள் என்ன என்பது நாளை தெரியவரும்.

கொரோனாவால் ஏற்பட்ட சிக்கல் மக்களின் மனவலிமையை வெளி கொணர்ந்துள்ளது.

முதலீடுகளை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தை சீர்திருத்தங்கள் செய்யப்படும்.

அனைத்து இந்தியர்களும் உள்நாட்டு பொருட்களை வாங்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

மாநிலங்களின் பரிந்துரையின் பெயரிலேயே 4 ம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்படும்.

4 ம் கட்ட ஊரடங்கு விவரங்கள் 18 ம் தேதிக்கு முன்பு மாநில முதல்வர்களின் பரிந்துரையின் பேரில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Related Articles

Back to top button
Close
Close