fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

சிக்கன நடவடிக்கை…! அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைத்த மாநில அரசு!

Telangana government order to reduce salary

ஐதராபாத்:

கொரோனா எதிரொலியாக ஊதிய சம்பள குறைப்பு உள்ளிட்ட நிதி நடவடிக்கைகளுக்காக தெலுங்கானாவில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தெலுங்கானாவில், முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடைபெறுகிறது.

கொரோனா ஊரடங்கால், மாநில நிதி நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில், குறிப்பிட்ட அளவில் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக இயற்றப்பட்ட, தெலுங்கானா பேரழிவு மற்றும் அவசர பொது சுகாதார நிலை, 2020′ சிறப்பு சட்டத்திற்கு, மாநில ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன், நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து, இச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இதில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனா வைரஸ் பரவி வரும் இக்கால கட்டத்தில், நிதி வருவாய் குறைந்துள்ளதால், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் தரப்படும் ஊதியம் உள்ளிட்ட நிதி செலவினங்களை, குறைக்கவோ, தாமதிக்கவோ அரசுக்கு அதிகாரம் உள்ளது.

இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close