fbpx
RETamil Newsஉலகம்

உகாண்டாவில் நடந்த பஸ் விபத்தில் 19 பேர் உயிரிழப்பு

உகாண்டா நாட்டில் சரியாக , சீரான சாலைகள் இல்லாததாலும் , வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படாததாலும்அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் உகாண்டா நாட்டின் கப்ச்சோர்வ மாவட்டத்தில் உள்ள கப்ச்சோர்வ – பேல் நெடுஞ்சாலையில் உள்ள மலைப்பாதையின் வழியே பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சீரான நிலையில் இல்லாத அந்த பஸ் நிலை தடுமாறி மலை முகத்தில் கவிழ்ந்து விழுந்தது.

 

இந்த விபத்தில் அமெரிக்காவை சேர்ந்த அரசு அமைப்பு அல்லாத ஊழியர்கள் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அந்த விபத்தில் படுகாயம் அடைந்த 6 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close