fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

பள்ளிகள் திறப்புக்கு என வரைவு திட்டம்…! மத்திய அரசு அதிரடி!

Draft may prepare to open schools in india

டெல்லி:

நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பது தொடர்பாக வரைவு திட்டம் தயாரிக்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 2 மாதங்களாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. 4ம் கட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிகிறது.

ஆகையால் பல மாநிலங்களில் பள்ளிகளை திறக்க அந்தந்த மாநில அரசுகள் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றனஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் செப்டம்பர் முதல் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கலாம் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

இந் நிலையில் நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பது தொடர்பாக வரைவு திட்டம் தயாரிக்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த திட்டத்தின்படி ஆறாம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்கள் மட்டுமே பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இப்போதைக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. அதிக மாணவர்கள் இருந்தால் பள்ளிகளை ஷிப்ட் முறையில் இயக்கவும் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது

Tags

Related Articles

Back to top button
Close
Close