fbpx
RETamil NewsTrending Nowஇந்தியா

காய்ச்சலுக்கு கேமரா…! ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு…! அசத்தும் சேட்டன்கள் மாநிலம்..!

Lockdown compulsory in all Sundays says Kerala

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் முதல் நோயாளி கண்டறியப்பட்ட மாநிலம் கேரளா. ஒரு கட்டத்தில் அந்த மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை சட்டென்று உயர, விழித்துக் கொண்ட பினராயி விஜயன் தலைமையிலான அரசு முக்கிய நடவடிக்கைகளை கையில் எடுத்தது.

அந்த நடவடிக்கைகள் நாடு முழுவதும் முக்கியத்துவம் பெற, கேரளா மாடல் என்றே பெயர் உருவானது. இந் நிலையில், இனி ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

இது தவிர மேலும் சில முக்கிய நடவடிக்கைகளை அம்மாநில அரசு கையில் எடுத்திருக்கிறது. அதன்படி, பொது இடங்களில் காய்ச்சல் கண்டறியும் நவீன கேமராக்கள் அமைக்கப்படுகிறது. அதற்காக நெதர்லாந்தில் இருந்து நவீன ரக  கேமராக்கள் தருவிக்கப்பட்டுள்ளன.

மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மக்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்பதை கண்டறிய இந்த கேமிராக்கள் அங்கு பொருத்தப்படும். இந்தியாவில் கேரளாவில்தான் இதுபோன்ற கேமரா பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

Back to top button
Close
Close