fbpx
RETamil Newsஇந்தியா

கல்லூரி திறப்பு எப்பொழது? யுஜிசி ஆலோசனை மேற்கொண்டது

கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தடைபட்டுள்ள கல்லூரிகள் திறப்பு மற்றும் தடைபட்டுள்ள பல்கலைக்கழக பருவ தேர்வுகளை எப்பொழது நடத்துவது என்பது குறித்த அவசர ஆலோசனையை பல்கலைக்கழக மானிய (யுஜிசி) குழு நேற்று நடத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக யுஜிசி சார்பில் அமைக்கப்பட்ட இரு குழுக்களின் பரிந்துரைகள் குறித்து இந்த கூட்டத்தில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கின் காரணமாக நாட்டில் எல்லா பள்ளிகள் , கல்லூரிகள் , நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. அதனால் கல்லூரிகளில் நடைபெற இருந்த ஏப்ரல்-மே மாதத்திற்க்கான பல்கலைக்கழக பருவ தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ஊரடங்கு மேலும் நீட்டிக்க வாய்ப்புள்ளதால் , 2020-2021 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை, கல்லூரிகள் திறப்பு ஆகியவை தள்ளி போகும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் கல்லூரிகளின் திறப்பு , மற்றும் ஒத்திவைக்கப்பட்ட பருவ தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து ஆய்வு செய்து பரிந்துரை சமர்ப்பிக்க இரு குழுக்களை யுஜிசி அமைத்தது.இந்த இரு குழுக்களும் அண்மையில் அறிக்கையை சமர்ப்பித்தது.

அதில் கல்லூரி பல்கலைக்கழங்களில் 2020-2021 கல்வியாண்டு வகுப்புகளை ஜூலைக்கு பதிலாக செப்டம்பரில் இருந்து தொடங்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.மேலும் பருவ தேர்வுகளை ஆன்லைனில் நடத்தலாம் , இந்த வசதி இல்லாத கல்லூரிகள் ஊரடங்கு முடிந்த பின்னர் தேர்வுகளை நடத்திக்கொள்ளலாம் எனவும் அந்த குழுக்கள் பரிந்துரை செய்துள்ளது.

இந்த பரிந்துரைகள் மீது யுஜிசி அதிகாரிகள் திங்கட்கிழமை ஆலோசனை நடத்தினர் இது குறித்து யுஜிசி செயலர் ரஜனீஷ் ஜெயின் கூறியதாவது;

யுஜிசி உறுப்பினர்கள் காணொலி மூலம் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.இரு குழுக்களின் பரிந்துரைகள் மீது நீண்ட விவாதம் நடைபெற்றது.இறுதியில் அந்த இரு குழுக்களின் பரிந்துரையையே சரியானதாக இருக்கும் என்ற முடிவை யுஜிசி உறுப்பினர்களும் எடுத்துள்ளனர்.எனவே இது தொடர்பான வழிகாட்டுதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விரைவில் வெளியிடப்படும் என்றார் அவர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close