fbpx
RETamil Newsஉலகம்

ஈரானில் விஷ சாராயம் குடித்து 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !!

உலகையே இன்று கொரோனா என்ற வைரஸ் மிக மோசமாக பாதிப்படைய வைத்துள்ளது.அவ்வாறு பாதிப்படைந்த நாடுகளில் ஈரானும் ஒன்றாகும். இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் பெரும் பாதிப்படைந்த முதல் நாடாகவும் ஈரான் அமைந்துள்ளது.

அந்த நாட்டிலும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இவ்வாறு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 91 ஆயிரத்தை கடந்துள்ளது.

அதேபோல் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 6 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவின் பொருளாதார தடையால் நிலைகுலைந்துள்ள ஈரான், கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திக்கித்திணறி வருகிறது.

பொருளாதார தடையால் ஈரானில் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கொரோனா நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்க முடியாமல் தவித்து வருகிறது.

தற்போது அங்கு கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் , சாராயம் குடித்தால் இந்த வைரஸில் இருந்து தப்பிக்கலாம் என்ற வதந்தியும் நாடு முழுவதும் வேகமாக பரவியது.

இதை நம்பிய மக்கள் சாராயத்தை தேடி வாங்கி குடிக்க தொடங்கியுள்ளனர்.சில பகுதிகளில் மக்கள் ‘மெத்தனால்’ என்ற வேதிப்பொருள் கலந்த சாராயத்தை குடித்தனர்.மனிதனின் உடம்பில் மெத்தனால் கலந்தால் அது மூலையில் பாதிப்பை ஏற்படுத்தி அவர்களின் உடல் உறுப்புகளையும் செயலிழக்க செய்ய வாய்ப்புள்ளது.
சில சமயங்களில் இதய நோய், குருட்டுத்தன்மை மற்றும் கோமா போன்றவை ஏற்படவும் வாய்ப்புள்ளது.

ஆனால் இவை அனைத்தையும் தெரிந்த மக்கள் கொரோனாவை தடுக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் மெத்தனால் கலந்த சாராயத்தை வாங்கி குதித்துள்ளனர்.


கடந்த பிப்ரவரி மாத இறுதி வரை இவ்வாறு சாராயம் குடித்த 30-க்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனாலும் மக்களிடையே இதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படவில்லை.

என்னினும் பெரும்பாலான மக்கள் இந்த விஷ சாராயத்தை குடித்துவருவதால் அங்கு தற்போதுவரை விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 700-ஐ தாண்டியுள்ளது.

இந்த தகவலை அன்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பிப்ரவரி மாத இறுதியுள் இருந்து தற்போது வரை விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 728-ஆக அதிகரித்துள்ளது.100-க்கும் அதிகமானோர் பார்வையிழந்துள்ளனர்.

கிட்டத்தட்ட 5,500-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதனால் பலி எண்ணிக்கையும் மற்றும் பார்வை இழந்தோர் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close