நீடாமங்கலம்-கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

நீடாமங்கலம்பெரியார் சிலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நேற்று திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு பிரச்சார கூட்டத்தின் பொழுது அத்துமீறி புகுந்து தாக்குதல் நடத்திய ஆர் எஸ் எஸ் குண்டர்களையும் பிஜேபி குண்டர்களையும் கைது செய்யக்கோரி தமிழக தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் கோரிக்கை வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் ஜான் கென்னடி தலைமையேற்றும், வலங்கைமான் ஒன்றிய செயலாளர் சண்முகம் முன்னிலையேற்றும் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராதா மற்றும் கந்தசாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, முருகேசன், காளியப்பன்,ராஜா, சிஐடியு கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பிலிப்ராஜ், எழுத்தாளர் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் அம்பிகாபதி சிஐடியு முன்னாள் பொறுப்பாளர் முனியாண்டி உள்ளிட்ட நீடாமங்கலம் மற்றும் வலங்கைமான் கட்சித் தோழர்கள் கலந்து கொண்டனர்.