fbpx
RETamil Newsஇந்தியா

இந்தியாவில் கொரோனா வைரஸ் மழைக்காலத்தில் மீண்டும் பரவ வாய்ப்பு – ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

உயிர்கொல்லியாக கருதப்படுகின்ற இந்த கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் மற்றும் ஒழிக்கும் முயற்சியில் அனைத்து உலக நாடுகளிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தீவிர கவனம் காட்டி வருகின்றனர்.

இவ்வாறு கொடூரமான இந்த கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவையும் விட்டுவைக்காமல் , ஊரடங்கிற்க்கு இடையிலும் அடங்காமல் அதன் பரவலை அதிகரித்து கொண்டே வருகிறது. தினமும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸின் பிடியில் சிக்கி தவித்து வருகிறார்கள். இவ்வாறு தினமும் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரிப்பதால் மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு கொரோனா வைரஸின் முதல் தாக்குதல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் , வரப்போகும் அடுத்த தாக்குதல் பற்றியும் விஞ்ஞனிகள் எச்சரிக்கை தொடங்கி விட்டார்கள். கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகள் ஜூலை மாத கடைசியில் அல்லது ஆகஸ்ட் மாதம் மழைக்காலத்தில் வந்து தாக்கும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையொட்டி உத்திரபிரதேச மாநிலம் தாத்திரி நகரில் உள்ள ஷிவ் நாட்டார் பல்கலைக்கழகத்தின் கணிதவியல்துறை பேராசிரியர் சமித் பட்டாச்சாரியா கூறியதாவது;

உலகையே அச்சுறுத்தி வந்து கொண்டிருக்கும் இந்த கொரோனா வைரஸ் தினமும் புதிது புதிதாக பலரையும் இந்த கொரோனா வைரஸ் தாக்கி இப்போது ஒரு உச்சத்தை எட்டியுள்ளது. இது இனி சரிவடையும் இருந்தாலும் அடுத்த சில வாரங்களில் அல்லது மாதங்களில் கூட அது மீண்டும் வந்து தாக்கும்.

இரண்டாவது அலை என்பது ஜூலை மாதத்தின் இறுதியுள் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் மழை காலத்தில் திரும்பி வரக்கூடும்.இதன் தாக்குதல் என்பது நாம் எந்த அளவுக்கு சமூக இடைவெளியை பின்பற்றுகிறோமோ அதை பொறுத்து தான் அமையும்.

நாம் கடந்து வந்துகொண்டிருக்கும் சில நாட்களில் புதிய நிகழ்வுகளை பார்க்கிறபோது , இதற்க்கு முன்பு இருந்ததைவிட இப்போது புதிதாக கொரோனா வைரஸ் பரவுவது சற்றே மெதுவாகத்தான் நடக்கிறது.இது நாம் உச்சத்தை தொட்டு வந்து விட்டோம் என்பதை காட்டுவதாக இருக்கலாம்.

சீனாவில் முன்னர் கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு மீண்டும் இந்த வைரஸ் தொற்று தாக்கியிருப்பது, இந்த கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு இது மீண்டும் தாக்கக்கூடும் என்பதை காட்டுகிறது. எனவே முந்தைய நோய் தொற்றானது , இரண்டாவது நோய் தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை பெற உதவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

எனவே ஒட்டுமொத்த மக்களும் இரண்டாவது அலை ஓரளவு பாதிக்கக்கூடும்.

இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு தற்போதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. சந்தையில் தடுப்பூசி வருகின்றவரையில் , நாம் ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருந்தாகவேண்டும்.நாட்டில் பல பகுதிகளிலும் இந்த நோய்யானது எதிர்பார்க்காத விதத்தில் தாக்குகிறபோது, அந்த பகுதியை , உள்ளூர் அளவில் நாம் தனிமை படுத்த வேண்டும். அல்லது சமூக இடைவெளியை பின்பற்ற செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது நாம் ஊரடங்கு காலகட்டத்தில் இருக்கிறோம். நாம் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பும் போது , கொரோனா வைரஸ் தொற்று நம்மை தாக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

எனவே இந்த ஊரடங்கானது நமக்கு உரிய கால அவகாசத்தை தந்துள்ளது. இந்த நேரத்தில் நாம் சோதனைகளை செய்ய வேண்டும், பாதிப்புக்குள்ளனவர்களை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.தனிமை படுத்த வேண்டும். சிறப்பான சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும்.தடுப்பூசியை கண்டுபிடிக்க வேண்டும்.இந்த காலகட்டத்தில் நாம்
எப்படியும் இதை செய்தாக வேண்டும்.

மழை காலத்தில் நமது நாட்டில் பல இடங்களில் காய்ச்சல் பரவும் , எனவே காய்ச்சல் அறிகுறிகளை நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட கூடாது.

அறிகுறிகளைப்பற்றி கவலைப்படாமல் , தீவிரமாக பரவிய இடங்களில் நாம் சோதனைகளை அதிகரிக்க செய்ய வேண்டும்.பாதிப்புக்குள்ளானோரை அடையாளம் காண வேண்டும். அப்போதுதான் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவுவதை கட்டுப்படுத்த முடியும்.மக்கள் தங்கள் சுகாதாரம் குறித்து தீவிர கவனத்துடன் இருக்க வேண்டும் , மிகவும் கவனமாக இருந்தால் நடத்தை மாற்றங்கள் இருக்கலாம்., முக கவசம் அணிவது பொதுவானதாகி விடலாம்.

இவ்வாறு செய்வது அனைத்தும் இரண்டாவது அலை தாக்குகிறபோது அதை கட்டுப்படுத்த உதவும் என பல ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close