fbpx
RETamil Newsஇந்தியா

இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடக்கும் அபாயம் !!

உலகின் வளர்ந்த மற்றும் வளரும் என அனைத்து நாடுகளிலும் இந்த கொரோனா வைரஸ் பரவி அதன் கோர தாண்டவத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2 லட்சத்திற்க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வல்லரசான அமெரிக்கா நாட்டையே ஆட்டம் காண செய்துவிட்டது இந்த கொரோனா வைரஸ். அதேபோல் இந்தியாவிலும் பரவிவரும் இந்த கொரோனா வைரசால் நாடு முழுவதும் 40 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கானது இந்தியாவில் மிகவும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டதால் , அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட கொரோனா வைரஸின் பாதிப்பு இந்தியாவில் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. ஆனால் அதையும் தாண்டி கொரோனா அதன் பரவலை இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகிறது.

நாடு தழுவிய ஊரடங்கு மட்டும் இல்லாமல் , மாநிலங்களும் 144 தடை உத்தரவு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. ஆனாலும் கொரோனாவிற்கு முழுமையான முற்றுப்புள்ளி போடமுடியவில்லை. தற்போது இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 30 ஆயுரத்தை நெருங்கியுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி ,

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 30ஆயிரத்தை தாண்டும் நிலையில் உள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 7027 பேர் மீண்டுள்ளனர்.அதேபோல் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 937-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்ச கொரோனா பாதிப்பு மாநிலமாக மராட்டியம் விளங்குகிறது அங்கு 8590 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும் , உயிரிழந்தோர் எண்ணிக்கை 369-ஆகவும் அதிகரித்துள்ளது. அதேபோல் குஜராத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3548-ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close