Tamil News
ஹார்மோன் குறைபாடினால் ஏற்படும் விளைவுகள்
- ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தால் உணவு அல்லாதவற்றை உண்ணும் பழக்கம் சிலருக்கு ஏற்படும்.
- உதாரணமாக சிலேட் பென்சில், சாம்பல், கல், மண், சுண்ணாம்பு கற்கள், காய்ந்த பெயிண்ட், நகம், நகபூச்சு(nail polish), சமைக்காத அரிசி.
- ஹார்மோன் குறைபாடு, சத்து குறைபாடு இவற்றின் மறைவான விளைவுகள், கர்ப்பிணிகள், சில மனநல குறைபாடு (obsessive compulsive disorder, eating disorders) போன்றவை பொதுவான கவனிக்க படாத காரணங்கள்.
- சில பள்ளி செல்லும் பிள்ளைகள் மனதளவில் ஏதாவது வருத்தத்துடன் இருந்தாலும் இப்பழக்கம் ஏற்படும்.
- இத்தகைய பழக்கத்தால் சில சமயம் பிரச்சனை ஏற்படாது என்றாலும், தொடர்ந்து அதை கடைபிடித்தால் வயிற்றில் புண், இரத்தம் சுண்டுதல், எடை குறைவு/அதிகரிப்பு, வாய் வெந்தது போன்ற புண் என பட்டியல் நீளும்.
- ஒரு நல்ல விஷயம், உணவு முறை மூலம் எளிதில் சரி செய்யக்கூடியவை இவை.
- பொதுவாக இரும்பு சத்தும், விட்டமின்B வகைகள் (B1,B2,B3,B6,B7,B8,B9,B12) நிறைந்த உணவு பழக்கம் போதுமானதாக இருக்கும்.
- மிக அதிக அளவில் புண் இருந்தால் மருந்தும் உணவுமுறையும் சேர்ந்து எடுக்க வேண்டும்.
உதவும் உணவு முறை :
அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, முட்டை, பால், ஈரல், மாதுளம்பழம், தேங்காய்ப்பால், உலர்திராட்சை, முந்திரி, வேக வைத்த உருளைக்கிழங்கு, தக்காளி ஜூஸ், வெண்பூசணி, எள், பாசிபயறு, பருப்புவகைகள், பட்டாணி, சோயா பருப்பு, சோயா பால், சோயா பனீர் எனப்படும் டோஃபூ, போன்றவற்றை தினசரி உணவுகளில் சேர்க்கவும்.