வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நிவாரண நிதியாக ரூ. 51 லட்சம் வழங்கினார் – ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன்
கேரளாவில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை கொட்டி தீர்த்தது. கேரளாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பியாதல், மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் பலர் இருப்பிடங்களையும், உடைமைகளையும் இழந்தனர். இன்னும் சிலர் தனது உறவுகளையும் இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலைமை மாறி பழைய நிலைக்கு திரும்ப ஏராளமானோர் கேரளாவுக்கு உதவி வருகின்றனர்.
இந்நிலையில் ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்கள் ரூ. 51 லட்சத்தை கேரள முதலமைச்சர் நிவாரண நிதி வாங்கி கணக்கில் நிவாரண நிதியாக வழங்கினார். அதுமட்டுமல்லாமல் தான் பயன்படுத்திய ஆடைகளை சவுண்டு எடிட்டரான ‘ரெசுல் பூக்குட்டி ஒருங்கிணைத்த அமைப்பு’ மூலம் வழங்கியுள்ளார். இதுகுறித்து பூக்குட்டி சார்ந்த அமைப்பினர் கூறுகையில் நடிகர் அமிதாப் பச்சன் 51 லட்சம் நிதியுதவி அளித்தது மட்டுமல்லாது தான் பயன்படுத்திய 80 ஜாக்கெட்டுகள், 25 பேண்ட்கள், 20 சர்ட்கள், குளிருக்கு போர்த்தும் குல்லாக்கள் ஆகியவற்றையும் வழங்கியுள்ளார்.
ஹிந்தி திரையுலகினர் பலரும் கேரளாவுக்கு நிதியுதவி மற்றும் பொருளுதவி செய்து வருகின்றனர்.