வெண்டைக்காய் சிப்ஸ் !
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் – 1/4 கிலோ
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் – 1/4 டீஸ்பூன்
அரிசி மாவு – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெண்டைக்காயை நீரில் கழுவவும். ஈரம் போக துணியால் துடைத்து, நீள துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
நறுக்கிய வெண்டைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் கரம் மசாலா, அரிசி மாவு, மல்லித் தூள், சோள மாவு, மிளகாய் தூள் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிரட்டி 15 நிமிடம் ஊற வைக்கவும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரட்டி வைத்துள்ள வெண்டைக்காய் கலவையை சேர்த்து, பொன்னிறமாகும் வரை நன்கு வறுத்து கொள்ளவும். பொன்னிறமாக மாறியதும் இறக்கவும். மிகவும் சுவையான வெண்டைக்காய் சிப்ஸ் தயார்.
இந்த வெண்டைக்காய் சிப்ஸை தயிர் சாதத்திற்கு வைத்து சாப்பிட மிகவும் சுவையானதாக இருக்கும்.