fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

வீடுகளுக்கான தள பரப்பளவு குறியீடு அதிகரிப்பு – முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு !

சென்னை போன்ற நகரங்களில் வீடு கட்ட அனுமதிக்கப்படும் தள பரப்பளவு குறியீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் செலவுகள் குறைந்து வீடுகளின் விலையும் குறையும் சூழல் உருவாகியுள்ளது.

சென்னையில் வீடு அல்லது அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கு, எப். எஸ். ஐ (FSI ), அல்லது தள பரப்பு குறியீடு எனப்படும் கட்டிட ஒழுங்கு முறை விதி பின்பற்றப்படுகிறது. சென்னையில், சிறப்பு கட்டிடங்கள் எனும் 4 மாடிகளுக்கு மிகாத கட்டிடங்களுக்கு, எப் எஸ் ஐ. 1.5 மடங்காக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது மனை பரப்பை விட, ஒன்றரை மடங்கு பரப்பளவுக்கு கட்டிடங்களை அதில் கட்டலாம்.

இன்று முதல் அமலாகும் இந்த புதிய அறிவிப்பால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்:

எப்.எஸ்.ஐ. இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதால் 1000 சதுரடி  மனைப்பரப்பில் 2000 சதுர அடி பரப்புக்கு வீடுகளை கட்டலாம். புதிய நிலத்தை வாங்காமலேயே பழைய மனையில் அதிக கட்டிடங்களை கட்ட முடியும் என்பதால் நிலத்திற்கு செலவிடப்படும் பெரும் தொகை குறையும். இதன் காரணமாக குறைந்த விலைக்கு வீடுகளை கட்டுமான நிறுவனத்தினர் விற்க முடியும். எனவே இதன் பலன் நேரடியாக மக்களை சென்றடையும்.

சென்னையில் இனி வழக்கத்தை விட உயரமான கட்டிடங்களை கட்ட முடியும், கட்டிட அடர்த்தி கொண்ட சென்னை நகரில், நெருக்கடி குறையும் சூழல் உருவாகும். குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் மூன்றரை மடங்கு வரை எப்எஸ்ஐ அளிக்கப்படுகிறது.  மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் 5 மடங்கு வரையும், நியூயார்க் நகரில் 9 மடங்காகவும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close