RETamil Newsஅரசியல்இந்தியா
விவசாயிகள் பெயரால் ரூபாய் 5400 கோடி கடன் வாங்கி மோசடி செய்த மும்பை தொழிலதிபர்

மகாராஷ்டிராவில் தொழிலதிபர் ஒருவர் நூற்றுக்கணக்கான விவசாயிகளின் பெயரில் போலியாக விண்ணப்பித்து 5400 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்று மோசடி செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.
கங்கா கேட்ஸ் அண்ட் சுகர் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளரான ரத்னாகர் குட்டே என்ற தொழிலதிபர் 600 விவசாயிகளின் பெயரில் போலியாக விண்ணப்பித்து தலா 25 லட்சம் வரை கடனாகப் பெற்று மோசடி செய்து இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியதால் மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக கடந்த ஐந்தாம் தேதி தொழிலதிபர் ரத்னாகர் குட்டை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட போதிலும் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.