RETamil Newsதமிழ்நாடு
வருமானவரிச் சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் ஸ்டாலின் வலியுறுத்தல்!
ஊழலில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்கள் மீதான விசாரணையும் வருமான வரி சோதனைகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாதுறைக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் சோதனைகள் வரவேற்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ளார்.
கரூர் அன்புநாதனில் தொடங்கி செய்யாதுறை வரை நடைபெற்ற அனைத்து வருமான வரி சோதனைகளை முறையாக விசாரிக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் தனது அறிக்கையின் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.