fbpx
RETamil News

வங்கி காசாளரே வங்கியில் திருடினார் – தினமும் ரூ.10000 திருடி குடித்துள்ளார்!!

போரூர் இந்தியன் வங்கி காசாளர் தினமும் ரூ.10,000 திருடி மது குடித்துள்ளார். இவ்வாறு செய்த அதிகாரியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் சென்னை போரூரில் உள்ள இந்தியன் வங்கியின் கணக்கை இந்தியன்
வங்கியின் மேலாளர் ஜனனி ஆய்வு செய்த போது அதில் 62 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டிருந்ததை கண்டறிந்தார்.உடனே இது குறித்து போரூர் காவல் நிலைய போலீசாரிடம் தகவல் அளித்து இந்தியன் வங்கியின் காசாளரான சுரேஷை கைது செய்யுமாறு புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஜபர்கான்பேட்டையை சேர்ந்த போரூர் இந்தியன் வாங்கி காசாளரான சுரேஷை கைது செய்தனர்.

பின் சுரேஷ் போலீசாரிடம் சிக்கியதும் தன குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார், அதில் அவர் கடந்த 3 ஆண்டுகளாக தினமும் ரூ.10,000 திருடி அந்த பணத்தில் மது அருந்தி செலவிட்டதாக கூறினார்.மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

Related Articles

Back to top button
Close
Close