RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு
மே.17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜாமீனில் விடுதலை !
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மே. 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜாமீனில் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
பெங்களூரு விமான நிலையத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதியன்று கைது செய்யப்பட்டார் திருமுருகன் காந்தி. பின்னர் அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் மீது 23 வழக்குகள் உள்ளன.
திடீரென்று மே.17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 55 நாட்கள் சிறையில் இருந்த அவர் இன்று ஜாமினில் வெளிவந்தார். சென்னை எழும்பூர் மற்றும் செங்கல்பட்டு நீதிமன்றங்கள் திருமுருகன் காந்திக்கு ஜாமீன் வழங்கியுள்ளன.