fbpx
Others

பாஜகஇந்திய பொருளாதாரத்தை கடுமையாக சீரழித்தது-ராகுல்

இந்திய பொருளாதாரத்தை கடுமையாக சீரழித்தது பாஜக - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் உள்ள கர்னாவில் ராகுல்காந்தி பேசியதாவது:-
காங்கிரசுக்கும் பழங்குடியினருக்கும் இடையிலான உறவு மிகவும் பழமையானது மற்றும் ஆழமானது. நாங்கள் உங்கள் வரலாற்றைப் பாதுகாக்கிறோம். உங்கள் வரலாற்றை அழிக்கவோ அல்லது அடக்கவோ நாங்கள் விரும்பவில்லை. காங்கிரஸ் ஆட்சியின் போது, ​​உங்களது நிலம், காடு, நீர் ஆகியவற்றைப் பாதுகாக்க சிறப்புமிக்க வரலாற்றுச் சட்டத்தை கொண்டு வந்தோம்:.
பாஜக அரசு நமது பொருளாதாரத்தை கடுமையாக சீரழித்துள்ளது. பணமதிப்பிழப்பு மற்றும் தவறான ஜிஎஸ்டியை பிரதமர் அமல்படுத்தினார். அதனால் நமது பொருளாதாரத்தை அது அழித்துவிட்டது. முந்தையகாங்கிரஸ் அரசு பொருளாதாரத்தை வலுப்படுத்த உழைத்தது ஆனால் பிஜேபி மற்றும் பிரதமர் மோடி அதை சேதப்படுத்தினர். நாட்டில் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காத சூழல் நிவவி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்

Related Articles

Back to top button
Close
Close