fbpx
REதமிழ்நாடு

ப.சிதம்பரம் வீட்டில் திருடர்கள் கைவரிசை ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் திருடபட்டுள்ளது.

முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் பணம் நகை கொள்ளை போயுள்ளது.இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ப.சிதம்பரத்திற்கு சொந்தமான வீடு ஒன்று நுங்கம்பாக்கத்தில் உள்ளது. அவர் சென்னை வந்தால் அந்த வீட்டில் தங்குவது வழக்கம். அந்த வீட்டை பாதுகாக்க பாதுகாவலர்களும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு இந்த வீட்டில் நகைகள், பணம் கொள்ளையடிக்க பட்டுள்ளது.அதன் மதிப்பு 1.10 லட்சம் என தகவல்கள் வந்துள்ளது. ப.சிதம்பரம் வெளியூர் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் பட்டுள்ளது.காவலர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close