பாதாம் சாப்பிடும் முறை அதனால் நாம் பெறும் நன்மைகள் !!!
பொதுவாக அனைவரும் பாதாமை பச்சையாக தான் சாப்பிடுவோம். ஆனால் பாதாமை பச்சையாக சாப்பிடுவதை விட, இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவது தான் நல்லது.
பாதாம் அனைத்து கடைகளிலும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்று. இப்போது பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம்.
கர்ப்பிணிகள் பாதாம் உண்பதால் :
பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், உடலில் ஃபோலிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும். ஃபோலிக் அமிலம் தாயின் வயிற்றில் உள்ள குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியமானது. இச்சத்து குறைவாக இருந்தால் தான் பிறப்பு குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கும்.
உயர் இரத்த அழுத்தம்:
நீரில் ஊற வைத்து பாதாமை சாப்பிடும் போது, இரத்தத்தில் உள்ள ஆல்பா டோகோபெரோல் என்னும் பொருள் அதிகரித்து, இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும்.
கெட்ட கொலஸ்ட்ரால்:
பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடும் போது, கெட்ட கொலஸ்ட்ரால் குறைவதோடு, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். இதனால் இதயத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.
செரிமானம்:
பாதாமை நீரில் ஊற வைக்கும் போது, அதிலிருந்து லிபேஸ் என்னும் நொதி வெளியிடப்படும். இந்த நொதி செரிமானம் சீராக நடைபெற உதவும்.
முதுமையைத் தடுக்கும்:
நீரில் ஊற வைத்த பாதாமில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருக்கும். இது ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்து, முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடும்.
இரத்த சர்க்கரை அளவு:
பல ஆய்வுகளில் ஊற வைத்து சாப்பிடும் பாதாம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.