கோவைமாவட்டஆட்சியரின் கவனத்திற்க்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம்…?
கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா மையமாகவும், இயற்கை அழகுக்கு பெயர் பெற்ற நகரமாகவும் விளங்கும் வால்பாறை பகுதியில், சாலை ஓரங்களில் கட்டுப்பாடின்றி கொட்டப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகளால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நகரின் பிரதான சாலைகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் வழித்தடங்களின் ஓரங்களில் வீட்டு கழிவுகள், காய்கறி கழிவுகள், உணவுக் கழிவுகள் உள்ளிட்டவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அப்பகுதிகளில் தாங்க முடியாத துர்நாற்றம் வீசுகிறது.குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில், இவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். சில பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடப்பதால், அவ்வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்படுவதால் ஈ, கொசு, எலி போன்றவை அதிகரித்து, தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்த நிலையில், நகராட்சியின் கவனக்குறைவும், முறையான குப்பை அகற்றும் பணிகள் நடைபெறாததுமே இந்த நிலைக்கு முக்கிய காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார்கள் அளிக்கப்பட்டும், பெயரளவிலான நடவடிக்கைகளே எடுக்கப்பட்டதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். சில இடங்களில் ஒருசில நாட்கள் குப்பைகள் அகற்றப்பட்டாலும், அடுத்த சில நாள்களிலேயே மீண்டும் அதே இடங்களில்கழிவுகள்குவிந்துகிடப்பதுதொடர்கதையாகிவிட்டதாகவும்கூறப்படுகிறது.சுற்றுலா வளர்ச்சியைமுன்னிறுத்தி வரும் வால்பாறை நகரில், இத்தகைய சுகாதாரமற்ற சூழல் நகரின் பெயருக்கும் புகழுக்கும் பெரும் அவப்பெயரை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக சுற்றுலா துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள், சாலை ஓரங்களில் குப்பைகள் குவிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து வருவதாகவும், இது சுற்றுலா வருகையை எதிர்காலத்தில் பாதிக்கக்கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, தினசரி குப்பை அகற்றும் பணிகளை சீராக மேற்கொள்ள வேண்டும் என்றும், பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு அதிகரிக்க வேண்டும் என்றும், விதிமீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும்பொதுமக்கள்வலியுறுத்தியுள்ளனர். மேலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி, வால்பாறையை உண்மையிலேயே சுத்தமான, ஆரோக்கியமான சுற்றுலா நகரமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.கோவைமாவட்ட புகைபட கலைஞர் ஜெயப்பிரகாஷ் தே
