fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்உலகம்

சிங்கப்பூரில் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி…! 90 சதவிகித இடங்களில் வெற்றி!

Singapore election: PM loong led PAP returns power

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லூங் தலைமையிலான  மக்கள் செயல் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இவரது ஆட்சிக் காலம் முடிய 10 மாதங்கள் உள்ள நிலையில் பிரதமர் லீ முன்னதாகவே தேர்தலை அறிவித்தார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில்  பாராளுமன்ற தேர்தல் நேற்று  நடைபெற்றது. முககவசம், கையுறைகள் அணிந்தபடி சமூக இடைவெளியை பின்பற்றி மக்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.

வாக்களிக்க வழக்கமான நேரத்தை விட கூடுதலாக 2 மணி நேரம் வழங்கப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதில்,  ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

மொத்தம் போட்டியிட்ட 93 இடங்களில் 90 சதவிகித இடங்களில் ஆளும் கட்சி வெற்றி பெற்றது. மொத்த வாக்குகளில் 61.26 சதவிகித வாக்குகளை ஆளும் கட்சி பெற்றது. எதிர்க்கட்சி 10 இடங்களை பெற்றது. சிங்கப்பூரில் 1959 ஆம் ஆண்டு முதல் மக்கள் செயல் கட்சியின் ஆட்சியே தொடர்வது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

Back to top button
Close
Close