தமிழக அரசு சத்துணவு திட்டத்திற்கு முட்டை போன்ற சத்துணவு பொருட்கள் விநியோகித்து வருவது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் கிறிஸ்டி ஃபிரைட் கிராம்ஸ் நிறுவனம்.
இந்த நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமிக்கு சொந்தமாக திருச்செங்கோடு, இராசிபுரம், கோவை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உட்பட இந்தியா முழுவதும் 80 -க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.
இதை அடுத்து இந்த நிறுவனத்தில் பல முறைகேடுகள் நடக்கிறதாக வருமான வரித்துறையினருக்கு தகவல்கள் வந்தன. இதை அடுத்து கடந்த 5 -ம் தேதியில் இருந்து மும்பை, மற்றும் கேரளாவைச் சேர்ந்த வருமான வரித்துறையினர் குமாரசாமி வீடு, அலுவலகம், கிறிஸ்டி நிறுவனம் அதன் துணை நிறுவனங்கள், ஆடிட்டர் வீடு, அலுவலகங்கள் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குநர் சுதாதேவி வீடு, அலுவலகம் உட்பட 70 க்கும் மேற்பட்ட இடத்தில் தொடர்ந்து 4 -வது நாளாகச் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த வருமான வரி சோதனையின் காரணமாக கிறிஸ்டி நிறுவன ஊழியர்களுக்கு இன்னும் சம்பளம் போடவில்லை என ஊழியர்கள் வருத்தும் தெரிவித்தனர்.