போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குவதால் அதை சமாளிக்க அரசு பல நடவடிக்கைகள் எடுத்தவண்ணம் உள்ளது. நிதிச்சுமையை குறைக்க அரசு தீவிர ஆலோசனை நடத்தி இறுதியில் தற்போது நடத்துனர் இல்லா பேருந்து இயக்க முடிவு செய்துள்ளது.
முதல்கட்டமாக கோவை-சேலம் இடையே நடத்துனர் இல்லாமல் இடை நில்லா பேருந்து இயக்க முடிவு செய்யபட்டுள்ளது.
இந்த வகையான பேருந்தில் பேருந்து புறப்படும் இடத்திலே நடத்துனர் பயனச்சிட்டு கொடுத்துவிடுவார். பின்னர் ஓட்டுநர் மற்றும் பயணிகளுடன் நடத்துனர் இன்றி பேருந்து புறப்படும். இதில் நான்கு பேருந்துக்கு ஒரு நடத்துனர் என்ற விகிதத்தில் பணியமர்த்த படுவார்.
இதுகுறித்து சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன் கூறும்போது, சேமிப்பு என்ற பெயரில் நடத்துனர் இல்லா பேருந்து சேவையை துவக்கியுள்ளனர். இந்த சேவை பயனளிக்காது. தற்போதைய மோட்டார் வாகன சட்டத்தின் படி நடத்துனர் இல்லாமல் பேருந்துகளை இயக்கமுடியாது. இந்த சேவையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்..