GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா
ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய ரூ.15 ஆயிரம் ..! ஜெகனின் ஜெயமான அறிவிப்பு!
Andra Pradesh announces rs.15000 for deceased corona cases

அமராவதி:
ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்க அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதுவரையில் ஆந்திராவில் 36,221 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 365 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 16,464 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடுதிரும்பியுள்ளனர்.
இந் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அந்த குடும்பத்திற்கு ரூபாய் 15 ஆயிரத்தை நிதியுதவியாக அளிக்க ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதனை உடனே நடைமுறைப்படுத்த அரசு அதிகாரிகளுக்கு ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
















