fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

வரும் 25ம் தேதி விமான சேவை வேண்டாம்..! பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!

CM Edapaddi palanisamy letter to modi

சென்னை:

தமிழகத்தில் வரும் 25ம் தேதி முதல் விமான  சேவை தொடங்க வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந் நிலையில், வரும் 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கிறது.

இதை அத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்தார். இதன்படி, வரும் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் படிப்படியாக விமான சேவை தொடங்கப்பட உள்ளது. உள்நாட்டு விமான சேவையில் சென்னை, கோவையில் இருந்தும் விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வரும் 25ம் தேதி தமிழகத்தில் விமான சேவை தொடங்க வேண்டாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜூன் மாதத்திற்கு பிறகு தொடங்கலாம் என பிரதமருக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close