fbpx
RETamil NewsTechnologyஅரசியல்சந்தை

வரும் ஆண்டு முதல் சென்னையில் தயாராகும் ஐபோன்கள் !

சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஃபாக்ஸ்கான் ஆலை பல்வேறு நிறுவனங்களின் செல்போன்களை தயாரித்து வருகிறது. தற்போது ஐபோன் உற்பத்திக்காகப் பிரத்தியேகமான ஆலையையும் நிறுவியுள்ளனர்.

அடுத்த ஆண்டில் இருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில், வெவ்வேறு விதமான  ஐபோன்கள் தயாரிக்கப்பட உள்ளன. இந்த அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை செவ்வாய்க்கிழமை அன்று அறிவித்துள்ளது.

ஃபாக்ஸ்கான் உலகின் பிரபலமான பல போன் நிறுவனங்களுக்கு உற்பத்தியாளராக இருந்து வந்தது. ஐபோன் சென்ற ஆண்டு முதல் பெங்களூருவில் உள்ள பீனியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், அடுத்து ஆண்டு முதல் சென்னை ஸ்ரீபெரம்பதூரில் உள்ள ஃபாக்ஸ்கானில் ஐபோன் உற்பத்தி செய்யபட உள்ளது.

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் தற்போது 15,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதில் 90 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். ஐபோன் உற்பத்தி தொடங்கும் போது மேலும் புதிதாக ஊழியர்களைப் பணிக்கு எடுப்போம் என்று ஃபாக்ஸ்கான் தெரிவித்துள்ளது.

சென்னையில் ஆட்டோமொபைல் உற்பத்தி அதிகமாகச் செய்யப்பட்டு வந்த நிலையில் சமீபகாலமாக எலக்ட்ரானிக்ஸ் உற்பத்திகளும் அதிகரித்து வருகிறது என்று தகவல்கள் கூறுகின்றன.

Related Articles

Back to top button
Close
Close