fbpx
ChennaiRETamil Newsசந்தைதமிழ்நாடு

அதிகரித்த கொரோனா தொற்றால் அதிரடி…! கோயம்பேடு காய்கறி சந்தை திடீர் மூடல்…!

Increased Coronal Infection...! Sudden closure of the Vegetable Market in Koyambedu ...!

சென்னை: கோயம்பேடு காய்கறி சந்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுகிறது.

கொரோனா  வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு வரும் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஊரடங்கு அறிவித்தாலும் கோயம்பேடு சந்தையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அரசு அறிவித்த சமூக இடைவெளியை யாரும் கடைபிடிக்கவில்லை.

காய்கறி சந்தையில் வியாபாரிகள், தொழிலாளர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அடுத்தடுத்து கொரோனா தொற்று வேகம் எடுத்தது. இதையடுத்து, கோயம்பேடு சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற அரசு முடிவு எடுத்தது. இதன்படி, கோயம்பேடு பூ மற்றும் பழ சந்தை மாதவரத்திற்கு மாற்றப்பட்டது.

இந் நிலையில், கோயம்பேடு காய்கறி சந்தையும் தற்காலிக இடமாற்றம் செய்யப்படுகிறது. சென்னை, புறநகர் வியாபாரிகள் திருமழிசை சென்று காய்கறிகள் கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருமழிசையில் வரும் 7ம் தேதி முதல் சந்தை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close