தீர்ப்பால் எந்த பின்னடைவும் இல்லை – டிடிவி தினகரன்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று 18 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் மனு அளித்ததை தொடர்ந்து அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கிய நிலையில் இந்த தீர்ப்பினால் பின்னடைவு ஏதும் இல்லை, இதுவும் ஒரு அனுபவம் தான் என்று அமமுக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார். மேலும், 18 எம்.எல்.ஏக்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
எங்கள் எம்.எல்.ஏ.க்கள் எந்த தவறும் செய்யவில்லை, ஆனால் எங்களுக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது. மேல்முறையீடு செய்வது குறித்து 18 எம்.எல்.ஏக்களின் முடிவே இறுதியானது. மேல்முறையீடு தேவையில்லை என்றால் தேர்தலை சந்திப்போம் என்றும் கூறினார். மேல்முறையீடு செய்வதா? அல்லது தேர்தலை சந்திப்பதா? என ஆலோசனைக்கு பிறகே முடிவு செய்யப்படும். கர்நாடகாவில் எடியூரப்பா வழக்கின் பாதையிலேயே இந்த வழக்கும் செல்கிறது என்று தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தில் அவருக்கு வெற்றி கிட்டியது.