RETamil Newsதமிழ்நாடு
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடலுக்கு இறுதி அஞ்சலி

கருணாநிதியின் இறுதி ஊர்வலம் 4 மணியளவில் தொண்டர்கள் படை சூழ அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் தொடங்கப்பட்டது. இறுதி ஊர்வலம் ராஜாஜி ஹாலில் தொடங்கி சிவானந்த சாலை, வாலாஜா சாலை வழியாக அண்ணா சதுக்கம் சென்றடைந்தது.
தலைவர் கருணாநிதியின் விருப்பத்தின் படி “ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வெடுத்து கொண்டிருக்கிறான்”. என்று அவர் உறங்க போகும் சந்தன பேழையில் பொறிக்கப்பட்டுள்ளது. கண்ணீருடன் கருணாநிதியின் குடும்பம் இறுதி அஞ்சலி செலுத்துகிறார்கள்.
ராணுவ மரியாதையோடு இறுதி அஞ்சலி நடைபெறுகிறது. முப்படை வீரர்களின் அணிவகுப்போடு மரியாதை செலுத்தப்படுகிறது. துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்படுகிறது. சென்னை மெரினாவில் கருணாநிதியின் உடல், அண்ணாவின் பக்கத்தில் 7 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.