Tamil News
திராட்சையில் இருக்கும் நன்மைகள்..
மலச்சிக்கலை குணமாக்கும் திராட்சை
- திராட்சையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் இதை உண்ணலாம்.
- நீரில் ஊற வைத்த உலர் திராட்சை பழத்தை இரவில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.
- திராட்சையில் பலவகைகள் இருந்தாலும் கருப்பு திராட்சையில்தான் அதிக மருத்துவ குணம் உள்ளது.
- கருநீலம், கருஞ்சிவப்பு ஆகிய இரண்டு ரகத்திலும் ‘ஆந்தோசயானின்’, ‘பாலி பீனால்’ ஆகிய வேதிப்பொருட்கள் இருக்கின்றன.
- அவை புற்றுநோய் வராமல் பாதுகாக்கும். புற்றுநோய் வந்தால் அதன் தீவிரத்தை குறைக்கும்.
- திராட்சையில் அதிக அளவில் நார்ச்சத்தும், ப்ரூக்டோஸ் எனும் பழச்சர்க்கரையும் உள்ளது.
- நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் இதை உண்ணலாம்.
- இதில் இருக்கும் ‘ப்ரூக்டோஸ்’ சாப்பிட்ட உடன் உற்சாகத்தை வழங்கும்.
- திராட்சையை சர்க்கரை நோயாளிகள் நிறைய சாப்பிடலாம் என்று சிலர் சொல்கிறார்கள் அது தவறு.
சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவு மட்டும் உண்ணலாம்.
- இதில் வைட்டமின்-சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- இதை அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
- பழத்தில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்தே அதற்கு காரணம்.
- பொட்டாசியம் சத்தும் உள்ளதால் இருதய நோயாளிகள் இதை உண்ணலாம்.
- வெயில் காலங்களில் வியர்வை இழப்பால் உண்டாகும் நீர்ச்சத்து குறைபாட்டை இது போக்கி, உற்சாகம் தரும்.
- முகப்பரு வராமல் இருக்கவும், உடல்சூடு குறையவும், தோல் நோய்கள் குறையவும் திராட்சை பழத்தை சாப்பிடலாம்.
- திராட்சையில் இருக்கும் ‘ரெஸ்வெராட்ரால்’ எனும் சத்து, நோய்க்கான தடுப்பு மருந்துபோல் செயல்படுகிறது.
- இது கணைய புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு, வயிற்று புற்றுநோய் போன்றவைகளின் பாதிப்பை குறைக்கும்.
- திராட்சை விதையில் பெருமளவு கால்சிய சத்து உள்ளது.
- கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் எலும்பு நோய்களுக்கு இது நல்ல மருந்து. சித்த மருத்துவத்தில் திராட்சை கலந்த மருந்துகள் தயார் செய்யப்படுகின்றன.