தமிழகம் முழுவதும் 100-ல் 8 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு !
தமிழகத்தில் தற்போது 100-ல் 8 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது. பன்றிக்காய்ச்சல் மட்டும் இல்லாமல் டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலும் தாக்குவது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் , டெங்கு மட்டும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது.கடந்த வாரம் வரை 10 பேர் பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளநிலையில் , தற்போது 15 பேர் உயிரிழந்துள்ளது வருத்தப்படக்கூடியதாக உள்ளது.
சென்னை , காஞ்சிபுரம், கோவை ஆகிய பகுதிகளில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகாமஉள்ளது என்று தெரியவந்துள்ளது.மேலும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் 120 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டுகளும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுகாதாரத்துறை சார்பில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; ‘ பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை ஏ,பி,சி என்று தனி தனி பிரிவில் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் காய்ச்சல் , இருமல் , சளி பாதிப்பு உள்ளவர்களை ஏ பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டும்.அவர்களுக்கு போதிய சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பிவிடலாம்.
தொடர் காய்ச்சல், உடல் வலி, மூக்கடைப்பு, தொண்டை வலி,வாந்தி உள்ளவர்களை பி பிரிவில் எடுத்துக்கொண்டு அவர்களுக்கும் தேவையான சிகிச்சை மற்றும் மருந்துகள் அளித்து வீட்டிற்கு அனுப்பிவிடலாம்.
கடுமையான காய்ச்சல், மூச்சு திணறல் மற்றும் இதர அறிகுறிகள் உள்ளவர்களை மட்டும் சி பிரிவில் எடுத்துக்கொண்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் ‘ என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறு செய்வதால் அவர்கள் எளிதில் குணப்படுத்தப்படுவார்கள்.